தாலிபான்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சி பாக். எல்லையில் பசி, பட்டினியுடன் காத்திருக்கும் பல ஆயிரம் ஆப்கானியர்கள்!: செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி..!!

தினகரன்  தினகரன்
தாலிபான்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சி பாக். எல்லையில் பசி, பட்டினியுடன் காத்திருக்கும் பல ஆயிரம் ஆப்கானியர்கள்!: செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி..!!

இஸ்லாமாபாத்: தாலிபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கிவிட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து பல ஆயிரம் பேர் தப்பிச்சென்று பாகிஸ்தான் எல்லை அருகே காத்திருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம்  உறுதியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின்போல்டாக் மாவட்டத்தில் உள்ள சாமான் பார்டர் எல்லையில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் எல்லையில் அவர்கள் கால் கெடுக்க நின்று கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செயற்கைகோள் படம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாகும். அந்த மக்கள் பாகிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்தார்களா? என்பது தெரியவில்லை. காபூல் விமான விமான நிலையம் மீண்டும் தாலிபான்களின் வசம் வந்துவிட்டதால் அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது இயலாத காரியமாக மாறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் எல்லைகளான டோர்காக், ஸ்பின்போல்டாக், தஜிகிஸ்தான் எல்லையான ஷிர்கான், ஈரான் எல்லையான இஸ்லான் குவாலா ஆகிய பாதைகள் மூலம் ஆப்கானியஸ்தர்கள் உயிர் தப்பி வருகின்றனர். தாலிபான்களின் ஆட்சி எவ்வளவு கோரமாக இருக்கும் என்பதற்கு அங்கிருந்து தப்பியோடும் சொந்த நாட்டு மக்களின் நிலையே கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

மூலக்கதை