கிரிக்கெட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய புத்துணர்வு அவசியம்: ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

தினகரன்  தினகரன்
கிரிக்கெட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய புத்துணர்வு அவசியம்: ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

புதுடெல்லி: ஐபிஎல் டி20 போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்த முறை கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் வரிந்துகட்டும். இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அணியினரின் பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்றை ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டிவில்லியர்ஸ் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்ப முயற்சிப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. பயிற்சிக்கு பின் டி.வில்லியர்ஸ் கூறுகையில், ``மைதானம் சற்று ஈரமாக இருந்ததால் பந்தை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசுகிறார்கள். அதே நேரத்தில் இங்கு நிலவும் ஈரப்பதமான சூழலால், நாம் ஸ்கோர் செய்ய கடும் முயற்சி செய்ய வேண்டும். உடல் எடையை குறைப்பது நல்லது. ஆனால் என்னைப் போன்ற வயதானவன் கடுமையான முயற்சி செய்து கிரிக்கெட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தவரை உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.  ``என் உடற்தகுதியை விட அவரின் உடற்தகுதி  சிறப்பாக இருக்கிறது. இந்த வயதில், அவர் ஆடக்கூடிய அசாத்தியமான ஷாட்களை தன்னால் விளையாட முடியாது’’ என்று டி.வில்லியர்ஸ் குறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி பலமுறை கூறியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை