மான்செஸ்டர் போட்டி ரத்தால் இங்கிலாந்துக்கு ரூ.407 கோடி இழப்பு!: அடுத்த ஆண்டு இரண்டு டி-20 போட்டிகளில் விளையாட தயாராகும் இந்தியா..!!

தினகரன்  தினகரன்
மான்செஸ்டர் போட்டி ரத்தால் இங்கிலாந்துக்கு ரூ.407 கோடி இழப்பு!: அடுத்த ஆண்டு இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தயாராகும் இந்தியா..!!

டெல்லி: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்வதற்காக அடுத்த ஆண்டு இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியா முன்வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட 2020 தொடரில் பங்கேற்கவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கும் பட்சத்தில் அந்த தொடரை 5 போட்டிகள் கொண்ட தொடராக மாற்ற பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கூடுதலாக இரண்டு  2020 போட்டிகளில் விளையாடுவதும், ரத்தான டெஸ்ட் போட்டியை மீண்டும் விளையாடுவதும் என்பது இங்கிலாந்தின் விருப்பத்தை பொறுத்தது என்றும் ஜெய் ஷா தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு 407 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை