குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி; அடுத்த மாதம் இறுதியில் விற்பனை

தினமலர்  தினமலர்
குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி; அடுத்த மாதம் இறுதியில் விற்பனை

நியூயார்க் : அமெரிக்காவில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி அடுத்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்கா வில் கொரோனாவால் நான்கு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்; 6.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த முறை, கொரோனா பாதிப்பால் அதிக அளவிலான குழந்தைகள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இல்லாத பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் முன்னாள் ஆணையரும், 'பைசர்' நிறுவன இயக்குனர் குழு உறுப்பினருமான டாக்டர் ஸ்காட் கோட்டியப் கூறியதாவது:எங்கள் நிறுவனம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை தயாரித்துஉள்ளது. இதற்கான சோதனை இறுதிக் கட்டத்தில் உள்ளது. அக்., இறுதியில் இந்த தடுப்பூசிக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தடுப்பூசி விற்பனை துவங்கும். குழந்தைகளுக்கான தடுப்பூசி என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல மாடர்னா நிறுவனமும் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் விரைவில் அரசு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க் : அமெரிக்காவில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி அடுத்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்கா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை