உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவும் காரணம்: டிரம்ப் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவும் காரணம்: டிரம்ப் குற்றச்சாட்டு

ஓஹியோ: உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவும் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் டிரம்ப் மற்றும் பிடன் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரோனா இறப்பு குறித்த விவரங்களை இந்திய முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றார்.

உலக வெப்பமயமாதல் குறித்த சர்ச்சயைின் போது, அமெரிக்கா உலக வெப்பமயமாதலுக்கு 15 சதவீதம் பொறுப்பு என்று ஜோ பிடன் கூறினார். இதை மறுத்த டிரம்ப், அமெரிக்காவை விட இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். சீனா, இந்திய, ரஷ்ய நாடுகள் தொடர்ச்சியாக மாசினை காற்றில் கலந்து வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலக்கதை