கோல்கட்டா 174 ரன்கள் குவிப்பு

தினமலர்  தினமலர்
கோல்கட்டா 174 ரன்கள் குவிப்பு


துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன.
ராஜஸ்தான், கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் 47, இயான் மார்கன் 34, ரசல் 24 கைகொடுக்க 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை