அக். 15 முதல் தியேட்டர்கள் திறக்கலாம்: 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

தினமலர்  தினமலர்
அக். 15 முதல் தியேட்டர்கள் திறக்கலாம்: 5ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

புதுடில்லி: 5-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மத்திய அரசு அனுமதியளித்தது.


கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து 4.0 எனப்படும் 4வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆக. 29-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. 4-வது கட்ட ஊரடங்கு காலம் நிறைவடைய உள்ள நிலையில் இன்று 5-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்.,31 வரை நீட்டித்து மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.


அதன் விவரம்

* ஐந்தாம் கட்ட தளர்வில் வரும் அக். 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள், மல்டிப்ளக்ஸ் அரங்குகள் திறக்க அனுமதி .

* அக். 15-க்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம்.மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்

* நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும்.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக். 31 வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும்.

* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



மூலக்கதை