ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை