ஆந்திராவில் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிப்பு!..வெள்ளத்தில் பரிதாபமாக அடித்து செல்லப்பட்ட 10 எருமை மாடுகள்!!!

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிப்பு!..வெள்ளத்தில் பரிதாபமாக அடித்து செல்லப்பட்ட 10 எருமை மாடுகள்!!!

விஜயவாடா:  ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் அடித்து செல்லப்பட்டன. தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் விளைநிலங்களில் பயிரிடபட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. மேலும் அங்குள்ள ஆறுகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விஜயவாடா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் உள்ள பகுதிகள் தண்ணீரால் நிரம்பி உள்ளன. தொடர்ந்து தண்ணீர் கரைபுரண்டோடுவதால் நதிக்கரையோர மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் அரசு முகாம்களில் தங்கவைத்துள்ளனர். இதனிடையே கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பிரகாசம் அணை வழியாக 10க்கும் மேற்பட்ட மாடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகளை மீட்க பொதுமக்கள் முயன்றும் முடியவில்லை.  இதனால் கால்நடைகளை இழந்த மக்கள் கலக்கத்தில் உள்ளனர். தற்போது பிரகாசம் அணையிலிருந்து ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 658 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை பிரகாசம் அணையிலிருந்து வினாடிக்கு 6 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

மூலக்கதை