தமிழகத்தில் இந்தியை திணிக்கும் எண்ணமில்லை : திமுக எம்பி சிவாவிடம் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் இந்தியை திணிக்கும் எண்ணமில்லை : திமுக எம்பி சிவாவிடம் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி

புதுடெல்லி :தமிழகத்தில் இந்திய திணிக்கும் எண்ணம் கிடையாது என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதியத்துள்ளார்.டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்தித்த திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா சில கோரிக்கைகளை வைத்தார். இதையடுத்து அவர் கூறியதாவது,\' மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பாடகர்களுக்கு காப்புரிமை நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இது மூத்த பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது என தெரிவித்தேன். இதையடுத்து கோரிக்கை குறித்து உடனடியான பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதைத்தொடர்ந்து மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை சந்தித்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய பாடத்திட்டம் புகுத்தப்பட்டது என்பது தவறு என வலியுறுத்தினேன். அவரும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் அதேநேரத்தில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடர வேண்டும் என வலியுறுத்தினேன். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், தமிழகத்தில் இந்தியை திணிக்கும் எண்ணம் இல்லை என உறுதியாக தெரிவித்தார். இருப்பினும் மாணவர்கள் தங்களது விருப்பமாக மூன்றாவது மொழியாக எதனை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே சொல்லிக் கொடுக்கும் வகையில் உள்ளது எனவே இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் தமிழகத்தில் என அவரிடம் மீண்டும் உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை