கொரோனாவை காரணம் காட்டி பயங்கரவாதிகளை பாக் மறைக்க முயற்சி: இந்தியா குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
கொரோனாவை காரணம் காட்டி பயங்கரவாதிகளை பாக் மறைக்க முயற்சி: இந்தியா குற்றச்சாட்டு

நியூயார்க்: 'கொரோனா தொற்றை காரணம் காட்டி, 4,000 பயங்கரவாதிகளை, பட்டியலில் இருந்து மறைத்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கில், மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாடு முயற்சிக்கிறது' என, ஐ.நா., பொதுக்குழுவில், இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

'ஜம்மு -- காஷ்மீர் பிரச்னைக்கு, சர்வதேச அளவிலான சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்றால், தெற்காசியாவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படாது' என, பாக்., பிரதமர் இம்ரான் கான், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஐ.நா.,வுக்கான இந்திய செயலர் பவன் பாதே, கூறியிருப்பதாவது:ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள, பாக்., ஆக்கிரமிப்பு பகுதிகளில், பயங்கரவாத பயிற்சி முகாம்களை, அந்நாடு அதிகரித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க, அனைத்து முயற்சிகளையும், பாக்., தீவிரப்படுத்தி வருகிறது.கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள, 4,000 பயங்கரவாதிகளை பட்டியலில் இருந்து மறைத்து, அதன் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்த, பாக்., சதி திட்டம் தீட்டி வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை