மயங்க் அகர்வால் நம்பிக்கை | செப்டம்பர் 28, 2020

தினமலர்  தினமலர்
மயங்க் அகர்வால் நம்பிக்கை | செப்டம்பர் 28, 2020

துபாய்: ‘‘இரு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் வந்து தோற்றாலும், நம்பிக்கையுடன் உள்ளோம்,’’ என பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, முதல் போட்டியில் டில்லியிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தானிடம் 223 ரன்கள் எடுத்தும் வீழ்ந்தது. இதுகுறித்து பஞ்சாப் துவக்க வீரர் மயங்க் அகர்வால் கூறியது:

இரு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் வந்து தோற்றுள்ளோம். இருப்பினும் எங்கள் டிரசிங் ரூமில் வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளோம். இன்னும் 11 போட்டிகள் மீதமுள்ளன. இவற்றில் சிறப்பாக விளையாட வேண்டும். இதுவரை எங்களது திட்டப்படி சரியாக நடப்பது மகிழ்ச்சி.

‘சீனியர்’ கெய்ல் களமிறங்காதது குறித்து அணி நிர்வாகம் நிறைய பேசிவிட்டது. நாங்கள் இதுகுறித்து அதிகம் யோசிப்பது இல்லை. இது கேப்டன் மற்றும் பயிற்சியாளர எடுக்கும் முடிவு. கேப்டன் ராகுலும் நானும் நண்பர்கள். சிறந்த வீரர். ‘பார்ட்னர்ஷிப்பில்’ நிலைத்து விட்டால் அவ்வளவு தான். யாராவது ஒருவர் சதம் அடித்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை