‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா டில்லி | செப்டம்பர் 28, 2020

தினமலர்  தினமலர்
‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா டில்லி | செப்டம்பர் 28, 2020

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்று ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி அணி, வார்னின் ஐதராபாத்தை சந்திக்கிறது. டில்லி அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப்பை ‘சூப்பர்’ ஓவரில் வென்றது. அடுத்து சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது.

இன்று சாதித்தால் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும். துவக்க வீரர் ஷிகர் தவான் பேட்டிங் சுமார் ரகம் தான். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா, ரிஷாப் பன்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர். தவிர ஸ்டாய்னிஸ், ஹெட்மயர் பின் வரிசையில் கைகொடுக்கின்றனர்.

ரபாடா கூட்டணி

‘சீனியர்’ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதல் போட்டியில் தோளில் காயமடைந்தார். இருப்பினும் சுழலில் அமித் மிஸ்ரா, அக்சர் படேல் சிறப்பாக செயல்படுகின்றனர். தென் ஆப்ரிக்க ‘வேகங்கள்’ ரபாடா, நார்ட்ஜே கூட்டணி, எதிரணிக்கு கிலி தருகின்றனர்.

தோல்வி சோகம்

ஐதராபாத் அணி முதல் இரு போட்டியில் (பெங்களூரு, கோல்கட்டா) தோற்ற சோகத்தில் உள்ளது. கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவுடன் இன்று வில்லியம்சன் அணிக்கு திரும்புகிறார். இதனால் முகமது நபிக்கு இடம் கிடைக்காது. சகா, மணிஷ் பாண்டே, தமிழகத்தின் மணிஷ் பாண்டே பொறுப்பான ஆட்டத்தை தர வேண்டும்.

ரஷித் பலம்

பவுலிங்கில் சுழல் வீரர் ரஷித் கான் பெரும் பலமாக திகழ்கிறார். தவிர புவனேஷ்வர் குமார், அபிஷேக் சர்மா, தமிழகத்தின் நடராஜன் விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று கோட்டை விட்ட ஐதராபாத் இன்று முதல் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

மூலக்கதை