இலங்கை –வங்கதேச தொடர் ஒத்திவைப்பு | செப்டம்பர் 28, 2020

தினமலர்  தினமலர்
இலங்கை –வங்கதேச தொடர் ஒத்திவைப்பு | செப்டம்பர் 28, 2020

தாகா: இலங்கை, வங்கதேச தொடர் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இலங்கை மண்ணில் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கடந்த ஜூலை–ஆக.,ல் பங்கேற்க இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து இம்மாதம் வங்கதேச அணி இலங்கை செல்ல இருந்தது. அங்கு வீரர்கள் இலங்கை அரசு விதிப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு, முதல் டெஸ்ட் அக்., 23ல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு வங்கதேசம் மறுப்பு தெரிவித்தது. இலங்கையும் தனது முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் போர்டு வெளியிட்ட அறிக்கையில்,‘இலங்கை மண்ணில் வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தது. தற்போதைய கொரோனா சூழலில் இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது,’ என தெரிவித்தது.

மூலக்கதை