டிவாட்டியாவுக்கு வார்ன் பாராட்டு | செப்டம்பர் 28, 2020

தினமலர்  தினமலர்
டிவாட்டியாவுக்கு வார்ன் பாராட்டு | செப்டம்பர் 28, 2020

சார்ஜா: ராஜஸ்தான் வெற்றிக்கு கைகொடுத்த டிவாட்டியாவுக்கு ஷேன் வார்ன் பாராட்டு தெரிவித்தார்.

ஹரியானாவை சேர்ந்த அமித் மிஸ்ரா, சகால் வரிசையில் சுழற்பந்து வீச்சாளராக உள்ளார் டிவாட்டியா 27. ஹரியானா சார்பில் 15, 19 வயது கிரிக்கெட்டில் சகாலுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டிவாட்டியா, கடைசி நேரத்தில் 31 பந்தில் 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.

இதுகுறித்து இளவயது பயிற்சியாளர் விஜய் யாதவ் கூறியது:

டிவாட்டியா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். மிக அமைதியாக இருப்பார். மகனை கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் ஆர்வம் என்னை கவர்ந்தது. ஒரு வீரராக இருப்பவர் தனது பலம், பலவீனத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

அமித் மிஸ்ரா, சகாலை விட டிவாட்டியாவுக்கு பேட்டிங் திறமை இருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும் என்பேன். உனது பேட்டிங்கினால் ஐ.பி.எல்., போட்டியை வென்று தர முடியும் என எப்போதும் கூறினேன்.

ஒரே ஓவரில் இவர் ஐந்து சிக்சர் அடித்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஏனெனில், டிவாட்டியா உண்மையில் பேட்டிங் ஆல் ரவுண்டர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்ன் பாராட்டு

ராஜஸ்தான் அணி துாதர் ஷேன் வார்ன் கூறுகையில்,‘‘துவக்க பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், பிறகு துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், வெல்டன் டிவாட்டியா, வியக்க வைத்து விட்டீர்கள்,’’ என்றார்.

மூலக்கதை