'வீடியோ கான்பரன்சில்' ஜி - 20 நாடுகள் மாநாடு

தினமலர்  தினமலர்
வீடியோ கான்பரன்சில் ஜி  20 நாடுகள் மாநாடு

துபாய்: கொரோனா பரவல் காரணமாக, 'ஜி - 20' நாடுகளின் மாநாடு, முதல் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நவம்பர், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சர்வதேச நிதி ஆதாரங்களின் நிலை குறித்து ஆலோசிக்க, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட, 19 நாடுகள் ஒருங்கிணைந்து, 'ஜி - 20' நாடுகள் கூட்டமைப்பினை உருவாக்கின. இதன் மாநாடு ஆண்டு தோறும் நடக்கும். கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு நடுவே, 'ஜி - 20' நாடுகளின் மாநாடு நவம்பர், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முதன் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற உள்ளது.

இதில், நம் நாட்டின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.இந்த மாநாட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, ஜி - 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவரும், சவுதி அரேபிய மன்னருமான, பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், சமீபத்தில் கலந்துரையாடினர்.இந்த மாநாட்டில், 21ம் நுாற்றாண்டின் வாய்ப்புகளை அனைவரும் உணர்தல் என்ற அம்சம், அடிப்படை கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை