கணக்கை தொடங்கினார் மெஸ்ஸி

தினகரன்  தினகரன்
கணக்கை தொடங்கினார் மெஸ்ஸி

பார்சிலோனா அணிக்காக 2004 முதல் விளையாடி வருகிறார் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்tiனா). இந்த ஆண்டு அணி மாறுவதற்கான முயற்சிகளும் நடந்தன. நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பார்சிலோனா அணியில் நீடிப்பதாக மெஸ்ஸி அறிவித்தார். இந்நிலையில், ஸ்பெயினில் முக்கிய கால்பந்து தொடரான லா லிகா நேற்று தொடங்கியது. போட்டி ஒன்றில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை தோற்கடித்தது. அதில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி புதிய சீசனுக்கான கணக்கை தொடங்கினார்.

மூலக்கதை