ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை சீராய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை சீராய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு

மும்பை: இன்று துவங்குவதாக இருந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த மாதம் 29ம் தேதி துவங்குவதாக இருந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், ஒத்தி வைக்கப்படுகிறது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 6 உறுப்பினர்களின் பெரும்பான்மை கருத்துக்கு ஏற்ப வட்டி, கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். இதில் கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி சாரா உறுப்பினர்களின் 4 ஆண்டு  பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்து விட்டது. புதிய உறுப்பினர்கள் நியமனம் குறித்து மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான், கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை