மயங்க் அகர்வால் சதம்: பஞ்சாப் அணி ரன் குவிப்பு

தினமலர்  தினமலர்
மயங்க் அகர்வால் சதம்: பஞ்சாப் அணி ரன் குவிப்பு

சார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மயங்க் அகர்வால் சதம் கடந்து கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஒவரில் 223 ரன்கள் குவித்தது.


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. ராஜஸ்தான் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜாஸ் பட்லர், அன்கித் ராஜ்பூட் தேர்வாகினர்.


'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (106), கேப்டன் லோகேஷ் ராகுல் (69) கைகொடுக்க, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (13), நிகோலஸ் பூரன் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை