2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ஜப்பான் பிரதமர்

தினமலர்  தினமலர்
2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: ஜப்பானில் வரும் 2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என ஜப்பான் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்க இருந்தன. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், தற்போதைய நிலைமையில் கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வராததால், கொரோனா பரவலை இதுவரை முற்றிலும் தடுக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன.

இதனால் 2021ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆண்டில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தன. இந்நிலையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா உரையாற்றினர். பிரதமராக பதவியேற்றப்பின் அவரின் முதல் சர்வதேச உரையாகும்.

அவர் பேசியதாவது: வரும் 2021ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளது. இந்த ஒலிம்பிக் நிகழ்வு, மனிதகுலம் தொற்றுநோயை தோற்கடித்தது என்பதற்கான சான்றாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை