இனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்

தினகரன்  தினகரன்
இனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்

ஐக்கிய நாடுகள்: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பேச்சு ‘இடைவிடாத உளறல்’ என்றும் ‘விஷத்தை கக்கியதாகவும்’ கூறிய இந்திய பிரதிநிதி, ‘தீவிரவாதம், ரகசிய அணுசக்தி வர்த்தகம் ஆகியவை மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டு கால சாதனை,’ என கடுமையான பதிலடி கொடுத்தார். ஐநா பொதுச் சபையின் 75ம் ஆண்டு விழாவையொட்டி, உலக தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட வீடியோ பேச்சுகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசிய வீடியோ நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது.  அதில் பேசிய அவர், ‘காஷ்மீரில் இந்திய அரசு இனப்படுகொலை செய்கிறது. அதை திசை திருப்ப பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கிறது. எல்லையில் போர் ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அத்துமீறுகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அதிகபட்ச அமைதி காக்கின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிட்டு தீர்த்து வைத்தால் மட்டுமே தெற்காசியாவில் அமைதி நிலவும்,’ என்று இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.இதற்கு பதிலளித்து ஐநா.வுக்கான இந்தியாவின் முதல் செயலாளர் மிஜிடோ வினிடோ பேசியதாவது: ஐநா சபை தனது 75ம் ஆண்டு விழாவில் புதிய தாழ்வை கண்டுள்ளது. வெறுப்பையும், வன்முறையையும் தூண்டுவோரை சட்டவிரோதமாக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் சொல்லும் போது, தன்னைத்தான் குறிப்பிட்டுக் கொள்கிறாரா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. இந்த சபை, தனக்கென்ற பெருமை ஒன்றுமில்லாத, பேசுவதற்கு எந்த சாதனைகளும் இல்லாத, உலகிற்கு நியாயமான ஆலோசனை வழங்க தெரியாத ஒருவரின் இடைவிடாத உளறல்களை கேட்டுள்ளது. அவரது பேச்சின் மூலம் பொய்கள், தவறான தகவல்கள், போர் மோசடி, தீமை ஆகியவை இந்த சபையின் மூலம் பரப்புவதை கண்டோம்.கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த மக்களையே கொன்று, தெற்காசியாவில் இனப்படுகொலை முதன் முதலில் கொண்டு வந்த நாடு பாகிஸ்தான்தான். தனது தெய்வ நிந்தனை சட்டத்தின் மூலமும், கட்டாய மத மாற்ற சட்டத்தின் மூலமும், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என சிறுபான்மையினரை ஒட்டு மொத்தமாக இந்நாடுஅடக்கி வருகிறது. இன்று விஷத்தை கக்கிய இம்ரான்கான், கடந்த 2019ல் அமெரிக்காவில் பேசிய போது, தனது நாட்டில் சுமார் 30-40 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அவர்கள் இந்தியா மற்றும் ஆப்கனிலும் போராடுவதாகவும் குறிப்பிட்டார். அவர், ஐநா சபையை தீங்கு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.‘தீவிரவாதம், திருட்டுத்தனமும் பாக்.கின் 70 ஆண்டு சாதனை’வினிட்டோ தனது பேச்சில் மேலும், ‘‘கடந்த 70 ஆண்டு கால பாகிஸ்தானின் பெருமை என்பது தீவிரவாதம், ரகசிய அணுசக்தி வர்த்தகம், இன அழிப்பு, பெரும்பான்மை அடிப்படை வாதம் ஆகியவை மட்டும்தான். அந்நாட்டின் மற்றொரு நட்சத்திர சாதனை, ஐநா.வால் தீவிரவாதிகள் என அறிவிப்பட்ட ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்றவர்களுக்கு   அடைக்கலம் அளிப்பதுதான். தீவிரவாதிகளுக்கு அரசு நிதியில் இருந்து ஓய்வூதியம் அளிக்கும் நாடு அது. பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என்று ஜூலை மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதையும் நாம் அறிவோம்,’’ என்றார்.இந்தியா வெளிநடப்புஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பேச்சு ஒளிபரப்பப்பட்ட சிறிது நேரத்தில், இந்திய செயலாளர் வினிட்டோ தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளிே்ய சென்றார். அவையிலிருந்து வெளிநடப்பு செய்த அவர் பின்னர் மீண்டும் உள்ளே வந்து தனது சரமாரி பதிலடியை வழங்கினார்.நீங்க காலி செய்தால் பிரச்னை முடிஞ்சிடும்காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய வினிட்டோ, ‘‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் மூக்கை நுழைக்க முடியாது. காஷ்மீரில் நிலவிய பல ஆண்டு பிரச்னைகள் தீர்க்கப்பட்டு உள்ளன. தற்போது எஞ்சியிருக்கும் ஒரே பிரச்னை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான். பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருக்கும் அனைத்து பகுதியையும் காலி செய்யுமாறு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்’’ என்றார்.

மூலக்கதை