தங்கம் சவரனுக்கு 72 குறைந்தது

தினகரன்  தினகரன்
தங்கம் சவரனுக்கு 72 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 19ம் தேதி ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்தது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 1,552 அளவுக்கு குறைந்தது. சவரன் 38 ஆயிரத்துக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 25 அதிகரித்து ஒரு கிராம் 4,789க்கும், சவரனுக்கு 200 அதிகரித்து ஒரு சவரன் 38,312க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 9 குறைந்து ஒரு கிராம் 4,780க்கும், சவரனுக்கு 72 குறைந்து ஒரு சவரன் 38,240க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.

மூலக்கதை