எதிர்பார்ப்பு! தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்

தினமலர்  தினமலர்
எதிர்பார்ப்பு! தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்

பாசன பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதிக்கு மேட்டுப்பட்டியில் இருந்து பெரியாறு, வைகை பாசன நீர் திறக்கப்படும். வெளியேறும் நீரை அளவீடு கருவியில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறிக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் தண்ணீரை குறைத்து கொடுத்து விட்டு சரியான அளவு கொடுப்பதாக பொதுப்பணித்துறையினர் கணக்கு காட்டுகின்றனர் என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்

ஒரு போக பாசன விவசாய சங்க செயலாளர் ரவி கூறியதாவது: மேட்டுப்பட்டியில் 1050 கனஅடிக்கு பதில் 950ம், புலிப்பட்டியில் 400 பதில் 300 கன அடி நீர் திறப்பதால் ஒரு போக பாசன கடை மடை பகுதிக்கு செல்வதில்லை. ஆண்டுதோறும் பயிர்கள் பாழாகின்றன. பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் தானியங்கி நீர் அளவீடு கருவி பொருத்தப்படவில்லை, என்றார்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறுகையில், '' தானியங்கி அளவீடு கருவி பொருத்த உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை