சீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்

தினமலர்  தினமலர்
சீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்:  டிரம்ப்

சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தநிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது கொரோனா வைரஸ் குறித்து பேசிய அதிபர் டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது.சீன வைரஸ் நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது. அதை நாம் மீண்டும் உருவாக்குவோம். தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.

மூலக்கதை