என்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020

தினமலர்  தினமலர்
என்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020

 துபாய்: ‘‘டில்லி வீரர் பிரித்விக்கு சென்னை கேப்டன் தோனி உதவிய போட்டோ, இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. இதில் சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இப்போட்டியின் போது டில்லி வீரர் பிரித்வி ஷா, 43 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். இவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கண்ணில் ஏதோ பட்டுள்ளது போல. பந்தை கணித்து விளையாட சிரமப்பட்டார்.

விக்கெட் கீப்பராக இருந்த சென்னை அணி கேப்டன் தோனி, இதைக் கவனித்தார். எதிரணி வீரர் என்று பாராமால், பிரித்வி அருகில் சென்று, அவரது இடது கண்ணில் விழுந்த துாசியை எடுத்து விட்டார். இந்த போட்டோவை சென்னை அணி நிர்வாகம் தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது.

அதில்,‘ விளையாட்டினை விட மனிதத்தன்மைத் தான் மேலானது,’ என தெரிவித்துள்ளது. தவிர, பிரித்வி கண்ணில் பாதிப்பு உள்ளதா என தோனி கேட்கும் வகையில்ல என்னம்மா ‘கண்ணு’ சவுக்கியமா, என தெரிவித்தது. தோனியின் இச்செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ஐஸ் டு ஐஸ்’ என தெரிவித்தது. அதாவது ‘மிஸ்டர் கூல்’ என்று அழைக்கப்படும்‘ஐஸ்’ போன்ற கேப்டன் தோனி, பிரித்வியின் கண்களை (ஆங்கிலத்தில் ‘ஐஸ்’) பார்க்கிறார், என்ற பொருள்பட தெரிவித்தது.

மூலக்கதை