பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தினகரன்  தினகரன்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை. 12 துணைத் தலைவர்கள் மற்றும் 8 தேசிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்டோருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. 2 முன்னாள் முதல்வர்களான ரமன் சிங், வசுந்தரா ராஜே துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பங்கஜ் முண்டே உள்பட 13 பேர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

மூலக்கதை