ஆஸி., தொடர் ஒத்திவைப்பு | செப்டம்பர் 25, 2020

தினமலர்  தினமலர்
ஆஸி., தொடர் ஒத்திவைப்பு | செப்டம்பர் 25, 2020

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய மண்ணில், ஆப்கானிஸ்தான் அணி வரும் நவம்பரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோத இருந்தது. இதேபோல இங்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இவ்விரு தொடர்களையும் வரும் 2021–22 சீசனுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) ஒத்திவைத்துள்ளது. சமீபத்தில், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட், 3 ‘டுவென்டி–20’ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.ஏ., தற்காலிக தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கூறுகையில், ‘‘கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆப்கன், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுகளுடன் இணைந்து ஒருமனதாக தொடரை ஒத்திவைக்க முடிவு செய்தோம். இந்தியாவுக்கு எதிரான தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படும்,’’ என்றார்.

மூலக்கதை