ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்

தினமலர்  தினமலர்
ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்

மும்பை: 'யெஸ்' வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, 127 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை, அமலாக்கத்துறை முடக்கிஉள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட யெஸ் வங்கியில், 4,300 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.


யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றது. இந்நிலையில், ராணா கபூருக்கு சொந்தமாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, 127 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதற்கிடையில், 'மோர்கன் கிரெடிட்ஸ்' நிறுவனத்துடன் நடந்த பண பரிமாற்றம் பற்றி தெரிவிக்காததற்காக, ராணா கபூருக்கு, 'செபி' எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.



மூலக்கதை