எஸ்.பி.பி.,க்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும்

தினமலர்  தினமலர்
எஸ்.பி.பி.,க்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும்

சென்னை :'உலகம் முழுவதும் வாழும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை:

தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி, இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடி புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிப் பயணம், முழு அரசு மரியாதையுடன் நடைபெற, தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். எல்லைகள் கடந்து, ரசிகர்களுக்கு இன்னிசை தந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மத்திய, மாநில அரசுகளாலும், பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.

உலகம் முழுவதும் வாழும், அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரணியத்திற்கு, அரசு மரியாதை செலுத்த வேண்டும் என, முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை