ஐ.என்.எஸ்., தலைவராக இல.ஆதிமூலம் :25 ஆண்டுக்குப் பின் தமிழருக்கு வாய்ப்பு

தினமலர்  தினமலர்
ஐ.என்.எஸ்., தலைவராக இல.ஆதிமூலம் :25 ஆண்டுக்குப் பின் தமிழருக்கு வாய்ப்பு

பெங்களூரு: ஐ.என்.எஸ்., என அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, 'ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்'மற்றும் 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம்லட்சுமிபதி, ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாக உடைய அமைப்பு தான், ஐ.என்.எஸ்., என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம்.

இதன், 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், கர்நாடக மாநிலம், பெங்க ளூரில் நேற்று நடந்தது.இதில், 'ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்குமுன், 1995 - 96ம் ஆண்டில், 'தினத்தந்தி' அதிபர், மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இப்பதவியை வகித்துள்ளார். அவருக்கு அடுத்து, 25 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தான் தமிழருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், துணைத் தலைவர், உதவித் தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், செயற்குழு உறுப்பினர்களாக, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர், டாக்டர் ஆர்.லட்சுமிபதி;'தினத்தந்தி' நிர்வாக இயக்குனர் பாலசுப்ர மணிய ஆதித்தன்; 'தினகரன்' நிர்வாக
இயக்குனர், ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஐ.என்.எஸ்., புதிய நிர்வாகிகள் முழு விபரம்:



இல.ஆதிமூலம் - ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக் மற்றும் 'தினமலர்' நாளிதழ் - தலைவர்

டி.டி.பூர்கயஸ்தா - ஆனந்த பஸார் பத்ரிகா - துணைத் தலைவர்

மோஹித் ஜெயின் - எகனாமிக் டைம்ஸ் - உதவி தலைவர்

ராகேஷ் சர்மா - ஆஜ் சமாஜ் - - கவுரவ பொருளாளர்

மேரி பால் - பொதுச் செயலாளர்

இதர செயற்குழு உறுப்பினர்கள்:



டாக்டர் ஆர்.லட்சுமிபதி - 'தினமலர்' நாளிதழ்; எஸ்.பாலசுப்பிரமணியம் ஆதித்தன் - தினத்தந்தி; கிரிஷ் அகர்வால் - தைனிக் பாஸ்கர், போபால்; சமாஹித் பால் - பிரகதிவாடி; கவுரவ் சோப்ரா - பில்மி துனியா; விஜய் குமார் சோப்ரா - பஞ்சாபி கேசரி, ஜலந்தர்; கரண் ராஜேந்திர தார்தா - லோக்மத், அவுரங்காபாத்.
விஜய் ஜவஹர்லால் தார்தா - லோக்மத், நாக்பூர்; ஜக்ஜித் சிங் தார்தி - சார்தி கலா நாளிதழ்; விவேக் கோயங்கா - இந்தியன் எக்ஸ்பிரஸ், மும்பை; மகேந்திர மோகன் குப்தா - தைனிக் ஜாக்ரன்; பிரதீப் குப்தா - டேட்டா குவெஸ்ட்; சஞ்சய் குப்தா - தைனிக் ஜாக்ரன், வாரணாசி; சிவேந்திர குப்தா - பிஸினஸ் ஸ்டேண்டேர்டு; சர்விந்தர் கவுர் - அஜீத்.
எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார் - மாத்ருபூமிஆரோக்யா மாசிகா; தான்மே மகேஸ்வரி - அமர் உஜாலா, டில்லி; விலாஸ் ஏ.மராத்தி - தைனிக் ஹிந்துஸ்தான், அமராவதி; ஹர்ஷா மேத்யூ - வனிதா; தினேஷ் மித்தல் - ஹிந்துஸ்தான் டைம்ஸ், பாட்னா; நரேஷ் மோகன் - சண்டே ஸ்டேட்ஸ்மேன்; ஆனந்த் நாத் - கிரிஷோபிகா, மராத்தி; பிரதாப் ஜி.பவார் - சாகல்.
ராகுல் ராஜ்கெவா - தி சென்டினெல்; ஆர்.எம்.ஆர்.ரமேஷ் - தினகரன்; கே.ராஜா பிரசாத் ரெட்டி - சாக் ஷி, விசாகப்பட்டினம்; அதிதேப் சர்க்கார் - தி டெலிகிராப்; பிரவீன் சோமேஸ்வர் - தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்; கிரண் டி.தாகூர் - தருண் பாரத், பெல்காம்; பிஜு வர்கீஸ் - மங்களம் வார இதழ். ஐ.வெங்கட் - அன்னதாதா; வினய் வர்மா - தி டிரிபியூன்; ஹோர்முஸ்ஜி என்.காமா - பாம்பே சமாச்சார் வீக்லி; குந்தன் ஆர்.வியாஸ் - வியாபார், மும்பை; கே.என்.திலக் குமார் - டெக்கான் ஹெரால்டு மற்றும் பிரஜாவாணி; ரவீந்திர குமார் - தி ஸ்டேட்ஸ்மேன்.
கிரண் பி.வதோதரியா - சம்பவ் மெட்ரோ; பி.வி.சந்திரன் - க்ரஹலஷ்மி; சோமேஷ் சர்மா - ராஷ்ட்ரதுாத் சப்திக்; ஜெயந்த் மாமென் மேத்யூ - மலையாள மனோரமா; சைலேஷ் குப்தா - மிட் டே.

1939 முதல் இதுவரை தமிழகத்தில் இருந்து ஏழு பேர்


இந்த அமைப்பின் தலைவராக கஸ்தூரி சீனிவாசன் ( தி இந்து 1947-48), ராம்நாத் கோயங்கா(தி. இந்தியன் எக்ஸ்பிரஸ், 1951-52), சி.ஆர், சீனிவாசன்,( சுதேசிமித்திரன் ,1953-54), ஜி. நரசிம்மன் (தி இந்து, 1956-57), என்.முரளி (தி இந்து 1983-84), ஆர்.லட்சுமிபதி ( தினமலர் 1992-93) சிவந்தி ஆதித்தன்( தினத்தந்தி, 1995-96 வரை) இருந்துள்ளனர்.



மூலக்கதை