ஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு

தினகரன்  தினகரன்
ஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு

பெங்களூரு: ஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், ‘இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்’ புதிய தலைவராக, ஆதிமூலம் லட்சுமிபதி, ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் ஐ.என்.எஸ். என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன் 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. இதில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில், துணை தலைவராக டி.டி.பூர்கயஸ்தா, உதவித்தலைவராக மோஹித் ஜெயின், கவுரவ பொருளாளராக ராகேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். தவிர, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மூலக்கதை