சென்னை அணி பவுலிங்

தினமலர்  தினமலர்
சென்னை அணி பவுலிங்

துபாய்: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்ரேயாசின் டில்லியை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.


சென்னை அணியில் லுங்கிடி நீக்கப்பட்டு ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் தோள்பட்டை காயமடைந்த அஷ்வினுக்குப் பதில் அமித் மிஸ்ரா, மோகித் சர்மாவுக்குப் பதில் அவேஷ் கான் இடம் பெற்றனர்.

மூலக்கதை