கார் விபத்தை தவிர்க்க அமேசான் அறிமுகப்படுத்திய சென்ஸார் கேமரா

தினமலர்  தினமலர்
கார் விபத்தை தவிர்க்க அமேசான் அறிமுகப்படுத்திய சென்ஸார் கேமரா

வாஷிங்டன்: அமேசான் நிறுவனத்தின் அலெக்சா செயலி மற்றும் மின்னணு கருவி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. வாய்ஸ் கமெண்ட்கள் மூலமாக திரைப்படப் பாடல்களை அலெக்சா பிளே செய்யும். இதில் எப்.எம் கேட்கலாம். இது கார்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கார் ஓட்டிச் செல்லும்போது கைகளை பயன்படுத்தாமல் அலெக்சா வாய்ஸ் கமாண்ட் மூலமாக பல விஷயங்களைச் செய்யலாம். இதன்மூலம் ஸ்பீக்கரில் தொலைபேசி அழைப்பை ஏற்க முடியும். அதில் தற்போது ஓர் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலெக்சா கருவியின் தொடர்ச்சியாக தற்போது 200 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‛ரிங் கார் கேம்' என்ற பெயர் கொண்ட கார் பாதுகாப்பு கேமரா அமேசான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார்களில் பொருத்தப்படும் இந்த கேமரா, வாகனம் ஓட்டுபவரது வாய்ஸ் கமெண்டுகளை புரிந்து கொள்ளும். மேலும் காரைச் சுற்றி டிராபிக் அதிகமாக இருந்தால் கார் ஓட்டுனரை எச்சரிக்கும்.

இதனை அலெக்சா கருவியுடன் இணைத்துக் கொள்ளலாம். கார் விபத்து ஏற்பட்டால் உடனே அவசர உதவிக்கு காவலர்களை அழைக்க இதில் வசதி உள்ளது. இந்த கேமராவுடன் பொருத்தப்பட்ட சென்சார்கள் திருடர்கள் கார் கதவை திறக்க முயன்றால் எச்சரிக்கை மணி அடிக்கும். மேலும் பின்னால் வரும் வாகனம், காரின் பின்புறத்தில் இடிக்க முயன்றால் வாகன ஓட்டுநரை உடனடியாக எச்சரிக்கும். காரின் நான்கு புறமும் இந்த கேமரா சென்சார்கள் காருக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும். இந்த தானியங்கி சென்சார் அமெரிக்காவில் வாகன விபத்துகளை குறைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை