கடலுாரில் 514 பேர் 'டிஸ்சார்ஜ்' 250 பேருக்கு தொற்று; 2 பேர் பலி

தினமலர்  தினமலர்
கடலுாரில் 514 பேர் டிஸ்சார்ஜ் 250 பேருக்கு தொற்று; 2 பேர் பலி

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 954 ஆக உயர்ந்தது.

கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 18 ஆயிரத்து 704 பேர். நேற்று 250 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.நேற்று 514 பேர் குணமடைந்ததால், இது வரை 16 ஆயிரத்து 953 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 1,649 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 752 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 727 பேருக்கு தொற்று இல்லை. 3,071 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் 103 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.2 பேர் பலிமாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 204 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று 4 பேர் இறந்தனர். காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 80 வயது நபர், கடலுாரைச் சேர்ந்த 60 வயது நபர் ஆகியோர் நேற்று இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை