பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப்: ராகுல் சதம்

தினமலர்  தினமலர்
பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப்: ராகுல் சதம்

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் சதம் கடந்தார்.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் 132 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு வாஷிங்டன் சுந்தர் (30), டிவிலியர்ஸ் (28), பின்ச் (20) ஆறுதல் தந்தனர். பெங்களூரு அணி 17 ஓவரில் 109 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி சார்பில் பிஷ்னாய், முருகன் அஷ்வின் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை