'வாகன விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு பைக் ரைடிங்'

தினமலர்  தினமலர்
வாகன விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு பைக் ரைடிங்

தேனி : வாகனங்கள் ஓட்டும் போது விபத்தை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டி.என்.45 வே ரைடர்ஸ்'' கிளப் துவக்கி இரண்டு ஆண்டாக இந்தியாவின் பல மாநிலங்களில் பயணம் செய்து வரும் திருச்சி குழுவினர் போடி குரங்கணியில் இருந்து தேனி வந்தனர்.

ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டியன் 26, கூறியதாவது:மற்ற நாடுகளைவிட இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக தமிழகத்தில் சாலை விதிகளை கடைபிடிக்காததால் வாகன விபத்துக்களை தவிர்க்க முடியவில்லை. அதனால் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.திருச்சியில் டூவீலர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளேன். இதற்காக என் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என பலதுறைகளில் பணியாற்றும் 30 பேருடன் டி.என்.45 -வே ரைடர்ஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்தேன்.

மாதத்தில் ஒரு நாள் திருச்சி முதல் குறைந்தளவு 250 கி.மீ., துாரம் பைக் ரைடில் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவோம். போக்குவரத்து விதிமுறைக்கு உட்பட்டு ஹெல்மெட்',பாதுகாப்பு உபகரணங்கள் அணிவோம். நாங்கள் குறிப்பிட்ட இடங்களில் சந்திக்கும் பொது மக்களிடம் டூவீலரில் 'ெஹல்மெட்', காரில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம், வாகனத்தில் மிதவேகத்தில் பயணிப்பது, சிக்னல் இயக்கங்களை மதித்து நடப்பது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்குகிறோம். 2019 ல் இந்த விழிப்புணர்வுக்காக காஷ்மீர் வரை டூவீலரில் பயணித்தேன், என்றார். பின்னர் திருச்சி புறப்பட்டுச் சென்றனர். இவர்களை வாழ்த்த 99946 17728

மூலக்கதை