ராகுல் 2000 ரன்கள் | செப்டம்பர் 24, 2020

தினமலர்  தினமலர்
ராகுல் 2000 ரன்கள் | செப்டம்பர் 24, 2020

துபாய்: பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ஐ.பி.எல்., அரங்கில் தனது 2000 ரன்களை கடந்தார்.

துபாயில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், தனது 2வது ரன்னை கடந்த போது 2000 ரன்களை பதிவு செய்தார். இவர், 60 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்த இந்திய வீரரானார். எட்டு ஆண்டுகளுக்கு முன், சச்சின் 63 இன்னிங்சில் 2000 ரன்கள் எடுத்திருந்தார்.

* தவிர ராகுல், குறைந்த இன்னிங்சில் 2000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் முறையே கெய்ல் (48 இன்னிங்ஸ்), ஷான் மார்ஷ் (52) உள்ளனர்.

 

* ராகுல், இதுவரை 169 போட்டியில், 2 சதம், 16 அரைசதம் உட்பட 2130 ரன்கள் எடுத்துள்ளார்.

 

132 ரன்கள்

அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் 132* ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன், டில்லி அணியின் ரிஷாப் பன்ட் 128 ரன்கள் (எதிர்: ஐதராபாத், 2018) எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

* தவிர ராகுல், இத்தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் முறையே கெய்ல் (175*), பிரண்டன் மெக்கலம் (158*), டிவிலியர்ஸ் (133*) உள்ளனர்.

மூலக்கதை