ஷார்ஜாவில் விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை சான்றிதழ் அவசியம்

தினமலர்  தினமலர்
ஷார்ஜாவில் விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை சான்றிதழ் அவசியம்

அபுதாபி : ஷார்ஜா விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான பிசிஆர் ( PCR test ) சோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளையும் விதிமுறைகளையும் மேற்கொள்கிறது. சர்வதேச விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கட்டாயமாக கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து நாட்டு அரசுகளும் வலியுறுத்துகின்றன. ஷார்ஜாவில் உள்ள அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வழியாக, பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளை இன்று (செப்.,23) அறிவித்தது.


வழிகாட்டுதல்கள் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப உள்ளன. துபாய் உள்ளிட்ட நாடுகளில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், 96 மணிநேரத்திற்கு முன், எடுக்கப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் அவசியம் என துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் (DCAA) அறிவித்தது. தற்போது, சர்வதேச மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை தளமாகக் கொண்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷார்ஜா விமான நிலையம் அதன் பயணிகள் அனைவருக்கும் வருகை / புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு மேல் [4 நாட்கள்] எடுக்கப்பட்ட PCR சோதனையில் கொரோனா எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம்.


இருப்பினும், ஷார்ஜாவுக்கு பறக்கும் பயணிகளுக்கு முன் ஒப்புதல் தேவையில்லை. அபுதாபிக்கும் ஒப்புதல் தேவையில்லை. துபாயில் திரும்பி வருபவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் GDRFA ஒப்புதல் கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை