ஊரடங்கு பயனுள்ளதா? மறுமதிப்பீடுக்கு மோடி அறிவுரை

தினமலர்  தினமலர்
ஊரடங்கு பயனுள்ளதா? மறுமதிப்பீடுக்கு மோடி அறிவுரை

புதுடில்லி : “மாநிலங்களில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அமல்படுத்தப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பயனுள்ளதா என்பதை மறுமதிப்பீடு செய்யவேண்டும்,” என, மாநில முதல்வர்களிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள, ஏழு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதன்படி, மஹாராஷ்டிரா, தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களின் முதல்வர்களுடன், அவர் கலந்துரையாடினார்.

அப்போது, மருத்துவ பரிசோதனைகள், பாதிக்கப்பட்டோரை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு, முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார்.' கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருக்கும் சிறிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.நாடு முழுதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நல்ல பலனை தந்ததாக கூறிய பிரதமர் மோடி, மாநிலங்களில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அமல்படுத்தப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பயனுள்ளதா என்பதை மறுமதிப்பீடு செய்யவும், முதல்வர்களிடம், கேட்டுக்கொண்டார்.

மூலக்கதை