உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 10 மாவட்ட நீதிபதிகள் பெயர் பரிந்துரை: சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

தினகரன்  தினகரன்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 10 மாவட்ட நீதிபதிகள் பெயர் பரிந்துரை: சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 10 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75.  தற்போது 54 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 22 இடங்கள் காலி. இந்த நிலையில், பதவி மூப்பு அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மூத்த மாவட்ட நீதிபதிகள் பட்டியலை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அந்த பட்டியலில் மாவட்ட நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பட்டியலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 10 மாவட்ட நீதிபதிகளும் விரைவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.  நக்கீரன் சென்னையில் உள்ள தொழில் தீர்ப்பாய நீதிபதியாகவும், சிவஞானம் வீராசாமி தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், இளங்கோவன் மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், சாத்திகுமார் சென்னை நிதி மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், முரளி சங்கர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை