மும்பையிடம் சரிந்தது கோல்கட்டா

தினமலர்  தினமலர்
மும்பையிடம் சரிந்தது கோல்கட்டா

அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 49 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் கடந்தார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (80), சூர்யகுமார் யாதவ் (47) கைகொடுத்தனர். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. போலார்டு (15), குர்னால் (1) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் ஷிவம் மாவி 2 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் (30), நிதிஷ் ராணா (24), கம்மின்ஸ் (33) ஆறுதல் தந்தனர். கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
மும்பை சார்பில் பவுல்ட், பும்ரா, பட்டின்சன், ராகுல் சகார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை