வேளாண் சட்டங்களின் பாதிப்புக்கு முதல்வரின் பதில் என்ன

தினமலர்  தினமலர்
வேளாண் சட்டங்களின் பாதிப்புக்கு முதல்வரின் பதில் என்ன

சென்னை: 'மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:

குடிமராமத்து திட்டத்திலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் கால்வாய் துார் வாரும் பணிகளிலும், ஊழல் அரங்கேறி உள்ளது.பிரதமரின் கிசான் திட்டத்திலும், லட்சக்கணக்கான போலிகளை சேர்த்து, நிதியை சுரண்டிய முதல்வர் இ.பி.எஸ்., விவசாயி என்று சொல்லி கொள்ள, எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.


ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்தில், ஊழல் செய்ய மாட்டார்; எந்த மனிதரும் தன் சொந்த வீட்டில் கன்னக்கோல் போட மாட்டார்.விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தை இல்லாத வேளாண் சட்டங்களை, இரு சபைகளிலும், அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டு அளித்தது.
வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவாக, முதல்வர் பேசி வருகிறார் என்றால், அவர் உண்மையில் விவசாயியாக இல்லை; ஊரை ஏமாற்ற போட எத்தனிக்கும் உத்தமர் வேடமா?
தி.மு.க., விவசாய தொழிலாளர் அணியால் பட்டியலிடப்பட்டுள்ள, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை