ஜேசன் ஹோல்டர் தேர்வு | செப்டம்பர் 23, 2020

தினமலர்  தினமலர்
ஜேசன் ஹோல்டர் தேர்வு | செப்டம்பர் 23, 2020

துபாய்: கணுக்கால் காயத்தால் ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷுக்கு பதில் ஜேசன் ஹோல்டர் தேர்வானார்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் (துபாய்) ஐதராபாத் அணியின் ஆஸ்திரேலிய ‘ஆல்–ரவுண்டர்’ மிட்சல் மார்ஷ் 28, வலது கணுக்காலில் காயமடைந்தார். வெறும் 4 பந்து மட்டுமே வீசிய நிலையில் ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இவர், 2வது முறையாக காயத்தால் இத்தொடரில் இருந்து விலகினார். இதற்கு முன், 2017ல் தோள்பட்டை காயத்தால் வெளியேறினார்.

மிட்சல் மார்ஷுக்கு மாற்று வீரராக விண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் 28, தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014–15 சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ஹோல்டர், 2016ல் கோல்கட்டா அணி சார்பில் பங்கேற்றார். சமீபத்தில் முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடிய ஹோல்டர், விரைவில் எமிரேட்ஸ் வரவுள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத் அணி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘‘காயத்தால் மிட்சல் மார்ஷ் விலகினார். இவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். மாற்று வீரராக ஹோல்டரை தேர்வு செய்துள்ளோம்,’’ என, தெரிவித்திருந்தது.

மூலக்கதை