பலன் கொடுத்த பயிற்சி * சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி | செப்டம்பர் 23, 2020

தினமலர்  தினமலர்
பலன் கொடுத்த பயிற்சி * சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி | செப்டம்பர் 23, 2020

துபாய்: சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி சார்ஜாவில் நடந்தது. இதில் துவக்க வீரராக களமிறங்கி ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன், 32 பந்தில் 74 ரன் (9 சிக்சர், 1 பவுண்டரி) எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இவர் கூறியது:

கிரிக்கெட்டில் இப்போதைய தலைமுறையினர் பெரியளவு அடித்து விளையாடுவதைத் தான் எதிர்பார்க்கின்றனர் என நினைக்கிறேன். கடந்த ஐந்து மாதங்களாக இதற்காகத் தான் பயிற்சியில் ஈடுபட்டேன். தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளேன் என நினைக்கிறேன்.

இதற்கான உடற்தகுதியை பராமரிக்க, உணவு, பயிற்சிகளில் கடினமாக போராடினேன். ஏனெனில் ‘பவராக’ அடிக்க உடற்திறன் தேவை. மற்றபடி அங்கும் இங்கும் ஓடி பீல்டிங் செய்ய வேண்டும் என யாரும் விரும்ப மாட்டர். எல்லோரும் விக்கெட் கீப்பிங் செய்யத் தான் விரும்புவர். பட்லர், உத்தப்பா இருந்தாலும் நான் ‘கீப்பிங்’ செய்தது பயிற்சியாளர், கேப்டனின் முடிவு. எங்கள் ரசிகர்கள் முகத்தில் புன்னகை கொண்டு வந்தது மகிழ்ச்சி.

இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

மூலக்கதை