ரோகித் அரைசதம்: மும்பை 195 ரன்கள்

தினமலர்  தினமலர்
ரோகித் அரைசதம்: மும்பை 195 ரன்கள்

அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (80), சூர்யகுமார் யாதவ் (47) கைகொடுத்தனர். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. போலார்டு (15), குர்னால் (1) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் ஷிவம் மாவி 2 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை