இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பைகொல்கத்தா மோதல்

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று இரவு 7. 30 மணிக்கு அபுதாபியில்  மோதுகின்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தொடக்கம் அமைந்தபோதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால், மும்பை அணி தனது முதல் தோல்வியில் இருந்து மீள, ெகால்கத்தா அணியை வீழ்த்த ஆயத்தமாகி வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 19 முறையும், கொல்கத்தா 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.மும்பை அணியின் (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷான்/சவுரப் திவாரி, ஹார்திக் பாண்டியா, கிரண் போலார்ட், கிருணால் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், நாதன் கோல்ட்டர் நைல்/டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோர் உள்ளனர்.

அதேபோல், கொல்கத்தா அணியின் (உத்தேச லெவன்): ஷுப்மான் கில், சுநீல் நரேன், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆன்ட்ரே ரஷல், குல்தீப் யாதவ், பட் கம்மின்ஸ், பிரஷித் கிருஷ்ணன், ஷிவம் மாவி/கமலேஷ் நகர்கோட்டி ஆகிேயார் இடம்பெற உள்ளனர்.

.

மூலக்கதை