இஸ்ரேல்- பக்ரைன் இடையே வர்த்தக ரீதியிலான விமான சேவை துவக்கம்

தினமலர்  தினமலர்
இஸ்ரேல் பக்ரைன் இடையே வர்த்தக ரீதியிலான விமான சேவை துவக்கம்

வாஷிங்டன்: இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், யு.ஏ.இ. நாடுகளிடையே கடந்த 15-ம் தேதி முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.


இஸ்ரேல், பக்ரைன் நாடுகளிடையே உறவில் சுமூக உறவு ஏறபட்டதையடுத்து நேரடியாக வர்த்தகரீதியிலான விமான சேவைகள் துவங்கின.இதன்படி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் பென்குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் , பக்ரைனின் ஐலேண்ட் கிங்டம் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது.

மூலக்கதை