56.46 லட்சம் பேர் பாதிப்பு; 90,020 பேர் பலி; 45.87 லட்சம் பேர் ஓகே : இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்வு!!

தினகரன்  தினகரன்
56.46 லட்சம் பேர் பாதிப்பு; 90,020 பேர் பலி; 45.87 லட்சம் பேர் ஓகே : இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்வு!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 90 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 83,347 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,46,011 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,085 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்தது..* தொற்றில் இருந்து ஒரே நாளில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர்;.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 45,87,614 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,68,377 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.59% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 17.15% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 9,53,683 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 6,62,79,462 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!    மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :272809; குணமடைந்தோர் : 936554; இறப்பு : 33407தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46350; குணமடைந்தோர் :   497377 ; இறப்பு :     8947    டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 31623 ; குணமடைந்தோர் : 216401 ; இறப்பு :  5051கேரளா : சிகிச்சை பெறுவோர் :40453 ; குணமடைந்தோர் : 101731 ; இறப்பு : 572கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :93172; குணமடைந்தோர் :432450 ; இறப்பு : 8228    ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :71465 ; குணமடைந்தோர் :562376 ; இறப்பு :  5461

மூலக்கதை