'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை'

தினமலர்  தினமலர்
கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை

ஜெனிவா: உலகம் முழுவதும் பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளதாகவும் உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்தாலும், அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், பல மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் உள்ளன.


இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: பரிசோதனையில் உள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் முறையாக செயல்படும் என்பதற்கு எங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் அதிக பரிசோதனைகளை மேற்கொள்கிறோம், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். கொரோனாவை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 200 தடுப்பூசி, பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி வளர்ச்சியின் வரலாற்றில் சில தோல்வியடைந்தாலும், சில தடுப்பு மருந்துகள் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை