அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றி

தினகரன்  தினகரன்
அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: வான்வெளியில் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கும் அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சார்பில், ஒடிசா மாநிலம், சந்திப்பூர் சோதனை மையத்தில் இருந்து அபியாஸ் ஏவுகணை ஏவி நேற்று சோதனை செய்யப்பட்டது.  இரட்டை பூஸ்டர்கள் பயன்படுத்தி அதிவேகத்தில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை இரு இலக்குகளை மிக துல்லியமாக தகர்த்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை